விஜய் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் நேரடி மோதல்!
விஜய், சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகின்றன.
நடிகர் விஜய் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவரும் ஜன நாயகன் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வருமென நேற்று (மார்ச். 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்தாண்டு வெளியாகவுள்ள படத்தின் வெளியீட்டுத் தேதியை இவ்வளவு விரைவாக அறிவிக்க வேண்டியதன் தேவை என்ன? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இதையும் படிக்க: ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை எமி ஜாக்சன்! என்ன பெயர் தெரியுமா?
அண்மையில், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசியபோது, பராசக்தி திரைப்படத்தை 2026, பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதுவே, ஜன நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்கான காரணம் எனத் தெரிகிறது. முதலிலேயே விஜய் படம் பொங்கல் வெளியீடாக வருகிறது எனக் கூறிவிட்டால், சிவகார்த்திகேயன் படக்குழுவினர் வேறு தேதிக்கு வெளியீட்டை மாற்றுவார்கள் என நினைத்திருப்பார்கள்.
This Pongal
— Aakash baskaran (@AakashBaskaran) March 24, 2025
@DawnPicturesOff
ஆனால், பராசக்தி தயாரிப்பாளர் ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்குப் பின் மீண்டும் உறுதியாக பராசக்தி பொங்கலுக்கு வெளியாகும் என மறைமுகமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய், சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளர்கள் பொங்கல் வெளியீட்டில் நேரடியாகவே மோதிக்கொண்டிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.