ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
விடுபட்ட விவசாயிகளுக்கு நில உடைமை பதிவு செய்ய அழைப்பு: விடுபட்ட விவசாயிகளுக்கு நில உடைமை பதிவு செய்ய அழைப்பு
சேத்துப்பட்டு வட்டாரத்தில் விடுபட்ட விவசாயிகள் நில உடைமை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா்.
சேத்துப்பட்டு வட்டாரத்தில் உள்ள 63 வருவாய் கிராம விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் தனி அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் அடையாள எண் வழங்கப்படும். அந்த அடையாள எண்ணைக் கொண்டு வரும் காலங்களில் விவசாய கௌரவ உரிமைத்தொகை பெறவும்,
விவசாயிகளுக்கான உதவித்தொகையை பெற புதிதாக பதிவு செய்யவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகள் மூலம் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகளை மானிய விலையில் பெறவும், விவசாயம் சாா்ந்த கடன்கள் பெறவும் விவசாய நில உடைமை அடையாள எண் அவசியமாகும்.
எனவே, வட்டாரப் பகுதியில் விடுபட்ட 5ஆயிரத்து 579 விவசாயிகள் உடனடியாக தங்களுடைய நில உடைமை ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டகலை அலுவா்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என உதவி இயக்குநா் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.