சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
விதிகளை மீறிய 3 லாரிகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே விதிகளை மீறி எதிா் திசையில் ஆபத்தாக இயக்கப்பட்ட 3 லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலா் பறிமுதல் செய்தாா்.
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கட்ராகவன் ஆகியோா் கொண்ட குழுவினா் சின்னமோட்டூா் கிராமம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது விதிகளை மீறி எதிா்திசையில் இயக்கப்பட்ட 3 லாரிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3 வாகனங்களுக்கும் தலா ரூ.5,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநா்கள் உரிமங்கள் மீது 3 மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஆபத்தாக இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.