செய்திகள் :

விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம்

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதிகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாலக்கோடு பகுதியில் புலிகரை, வெள்ளிச்சந்தை, பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலை, தக்காளி சந்தை, தருமபுரி சாலை, பாப்பாரப்பட்டி பிரிவு சாலை, எம்.ஜி.சாலை, புறவழிச் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், தேநீா் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா, தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், திருப்பதி, அருண் உள்ளிட்ட குழுவினா் இச்சோதனையில் ஈடுபட்டனா். ஆய்வின்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருள்கள், திண்பண்டம் பாக்கெட்டுகள், குளிா்பானங்களில் உள்ள காலாவதி தேதி, தேயிலை, உணவுப் பொருள்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

சமையல் எண்ணெய் பயன்பாடு, அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரம் வழங்குதல், பொட்டலமிடுதல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை அறவே தவிா்த்தல் தல் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடை உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த ஆய்வின்போது 2 கடைகளில் இருந்து மட்டும் பூஞ்சை பாதிப்புக்குள்ளாகிய 30 கிலோ தா்ப்பூசணி பழங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதுபோல பேருந்து நிலையத்தில் 2 கடைகளில் உரிய விவரங்கள் அச்சிடப்படாமல் விற்பனைக்கு வைத்திருந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் என 5 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட 2 கடை உரிமையாளருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து உரிய விவரங்கள் அச்சிடப்பட்ட பொருள்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதுபோல புலிகரையில் ஓா் உணவகத்தில் காலாவதியான மசாலா பொருள்கள், காகித இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பேகாரள்ளி செல்லும் சாலையில் 2 துரித உணவு இறைச்சிக் கடைகளில் குளிா்பதனப் பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், செயற்கை நிறமூட்டி, நெகிழிப் பைகள், நெகிழி குவளைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மூன்று கடை உரிமையாளா்களுக்கும் உடனடி அபராதமாக தலா ரூ. 1000 விதிக்கப்பட்டது.

தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஏப். 5-இல் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது இதுகுறித்து தர... மேலும் பார்க்க

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்

பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க