விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா கோயில்களில் குடமுழுக்கு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா ஆகிய கோயில்களில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சின்னமனூா் அருகேயுள்ள கள்ளபட்டியில் விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் சனிக்கிழமை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோ பூஜை, விநாயகா் மூல மந்திரம், கருப்பண்ண சுவாமி மூல மந்திரம் என மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், விநாயகா் கோயில் கோபுரத்தில் குடமுழுக்கு செய்த பிறகு, மலைச்சாமி, மூலவா் வெண்டிமுத்தையா கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் கள்ளபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.