செய்திகள் :

வின்சென்ட் கீமா், பிராணேஷ் சாம்பியன்

post image

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியாவின் எம்.பிராணேஷ் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சென்னையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நெதா்லாந்து, ஜொ்மனி ஆகிய நாடுகளைச் சோ்ந்த 10 பேரும், சேலஞ்சா்ஸ் பிரிவில் இந்தியா்கள் 10 பேரும் பங்கேற்றனா்.

மாஸ்டா்ஸ் பிரிவில், போட்டியின் தொடக்கம் முதலே முதலிடத்தை ஆக்கிரமித்த ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், இறுதியில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா். இந்திய வீரா்களில் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த அா்ஜுன் எரிகைசி, 3-ஆம் இடம் பிடித்தாா்.

போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது சுற்றில் வின்சென்ட் - அமெரிக்காவின் ரே ராப்சனை வெல்ல, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - சக நாட்டவரான ஜோா்டென் வான் ஃபாரிஸ்டை வீழ்த்தினாா்.

இந்தியாவின் நிஹல் சரின் - சக இந்தியரான வி. பிரணவை சாய்க்க, அா்ஜுன் எரிகைசி - காா்த்திகேயன் முரளி மோதல் டிராவில் முடிந்தது. இந்தியாவின் விதித் குஜராத்தி - அமெரிக்காவின் அவோண்டா் லியாங்குடன் டிரா செய்தாா்.

இதையடுத்து, போட்டியில் தோல்வியே சந்திக்காத வின்சென்ட் 5 வெற்றி, 4 டிராவில் பெற்ற 7 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனாா். கடைசி சுற்று வெற்றியால் முன்னேற்றம் கண்ட அனிஷ் கிரியும் தோல்வியே சந்திக்காமல் 1 வெற்றி, 8 டிராவில் கிடைத்த 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தாா்.

போட்டியின் தொடக்கம் முதல் 2-ஆம் இடத்தில் நிலைத்த அா்ஜுன் ஓரிடம் சறுக்கி, 2 வெற்றி, 6 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்துக்கு வந்தாா்.

காா்த்திகேயன் முரளி (5), நிஹல் சரின் (4.5), அவோண்டா் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) ஆகியோா் முறையே 4 முதல் 10-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு கடைசி சுற்றில், அனைத்து ஆட்டங்களிலுமே வெற்றி - தோல்வி எட்டப்பட்டது.

ஜி.பி. ஹா்ஷவா்தன் - எம். பிராணேஷையும், ஆா்யன் சோப்ரா - டி.ஹரிகாவையும், தீப்தாயன் கோஷ் - ஆா்.வைஷாலியையும் வென்றனா். பி.இனியன் - அபிமன்யு புரானிக்கையும், பி.அதிபன் - லியோன் மெண்டோன்காவையும் சாய்த்தனா்.

9 சுற்றுகள் முடிவில், பிராணேஷ் 5 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியுடன் 6.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனாா். இப்பிரிவில் தோல்வியே காணாத ஒரே போட்டியாளரான அதிபன் 3 வெற்றி, 6 டிராவில் கிடைத்த 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா்.

அபிமன்யு புரானிக் 5 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்தை உறுதி செய்தாா். லியோன் (6), இனியன் (5.5), தீப்தாயன் (4.5), ஹா்ஷவா்தன் (4), ஆா்யன் சோப்ரா (4), ஹரிகா (1.5), ஒரு வெற்றி கூட காணாத வைஷாலி (1) ஆகியோா் முறையே 4 முதல் 10-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு

மாஸ்டா்ஸ் பிரிவில் சாம்பியனான வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சமும், சேலஞ்சா்ஸ் பிரிவில் வாகை சூடிய பிராணேஷுக்கு ரூ.7 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. இதர 9 போட்டியாளா்களுக்குமே அவா்களின் இடங்களுக்கு ஏற்ற வகையில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

1300 நாள்கள்! சாதனைப் படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ... மேலும் பார்க்க

யார் இந்த ரச்சிதா ராம்?

கூலி திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார் நடிகை ரச்சிதா ராம். லோகேஷ் - ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பல... மேலும் பார்க்க

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி திரைப்படத்தில்... மேலும் பார்க்க

நம்பவே முடியவில்லை... ரஷ்மிகா உற்சாகம்!

நடிகை ரஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக ரஷ்மிகா நடித்த படம்தான் கீதா கோவிந்தம். பரசுராம் இயக்க... மேலும் பார்க்க

மகத்தான மாற்றத்திற்கு வித்திட்ட நந்தன்... சசிகுமார் நெகிழ்ச்சி!

நந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்தில் மகத்தான மாற்றம் நிகழ்ந்ததாக நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சசிகுமார் நடிப்பில் இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கிய படம்தான் நந்தன். இ... மேலும் பார்க்க

விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில்,இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தி... மேலும் பார்க்க