கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
வியாபாரி தற்கொலை
கோவில்பட்டியில் குடும்பத்தகராறு காரணமாக வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி வீர வாஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் நாகராஜன் (46). சைக்கிளில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்த இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாம். இதனால் தினமும் இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை வியாபாரத்திற்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு, வீட்டின் மாடிக்குச் சென்று அங்குள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மேற்குகாவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.