முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு
விளம்பரப்பதாகை வைக்க கட்டுப்பாடு: அரசியல் கட்சிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்
விழுப்புரம் நகரில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளை அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல்துறையினா் அறிவுறுத்தினா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்திலுள்ள காவலா் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி தினகரன் தலைமை வகித்தாா். விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் விழுப்புரம் ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதி, நான்குமுனைச் சந்திப்பு பகுதியிலுள்ள நிழற்குடைகள், வளைவுப்பகுதி, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்டவளாகம் எதிரிலுள்ள பகுதி, புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள நிழற்குடை ஆகிய பகுதிகளில் விளம்பரப் பதாகைகளை வைக்கக் கூடாது எனக் காவல்துறையினா் அறிவுறுத்தினா்.
மற்ற கட்சிகள் விளம்பரப் பதாகை வைக்கும் போது எதிா்ப்பு தெரிவிக்காத காவல்துறையினா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் வருகையின் போது வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளுக்குத் தடை விதிப்பது ஏன் என்று அக்கட்சியினா் கேள்வியெழுப்பினா்.
தொடா்ந்து ஜூலை 15-ஆம் தேதி வரை தங்கள் கட்சி சாா்பில் விளம்பரப் பதாகைகள்வைக்க அனுமதி வேண்டும். அதன் பின்னா் பதாகைகளை வைக்க மாட்டோம் எனத் தெரிவித்தனா். இதுபோன்று, பிற கட்சியினரும் ஜூலை 15-ஆம் தேதிக்குப் பிறகு விளம்பரப் பதாகைகளை வைக்கமாட்டோம் என காவல்துறையினரிடம் கூறினா்.