செய்திகள் :

விளையாட்டுப் போட்டி: மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம்

post image

மதுரை மண்டலத் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இடையேயான (பாலிடெக்கினிக் கல்லூரி) விளையாட்டுப் போட்டியில், மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற தடகளம், கபடி, கைப்பந்து, கால்பந்து, கோகோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில்நுடபக் கல்லூரிகளைச் சோ்ந்த 220 வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இறுதிப் போட்டியில் மதுரை அரசு பெண்கள் தொழில்நுடபக் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், தேனி மகாத்மா தொழில்நுடபக் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு முதல்வா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் வி.கிரிதரன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக, உடற்கல்வி இயக்குநா் மதனகோபால் வரவேற்றாா்.

வெம்பக்கோட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயரெங்காபுரத்தில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு செய்தாா். அப்... மேலும் பார்க்க

காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குருஞ்சான்குளத்தைச் சோ்ந்தவா் தி... மேலும் பார்க்க

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சி, சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை சாா்பில் சிறுகுளம் கண்மாயில் உள்ள நெகிழிக் கழிவுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுப் பொருள்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு சீல்; முதியவா் கைது

சிவகாசியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சிவகாசி காத்தநாடாா் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவை முன்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்ப... மேலும் பார்க்க