திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம...
விழுப்புரத்தில் டிஆர்இ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை மருத்துவ மையமாகத் தரம் குறைக்கும் முடிவைக் கண்டித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விழுப்புரத்தில் துணை கோட்ட ரயில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையைத் தரம் குறைத்து சுகாதார மையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் தேர்வு எழுதிய மாணவன்: நெகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!
ரயில்வே மருத்துவ சேவைப் பிரிவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, விழுப்புரம் துணை கோட்ட ரயில்வே மருத்துவமனை முன் புதன்கிழமை டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் ஓபன் லைன் தலைவர் கமலக் கண்ணன் தலைமை வகித்தார். டிஆர்பியு ஈசுவர தாஸ் கோரிக்கைகளை விளக்கி தொடக்க உரையாற்றி பேசினார்.
டிஆர்இயு உதவிக் கோட்டச் செயலர்கள் வேந்தன், செந்தில், கோட்டத் துணைத் தலைவர் பலராம். துணைப் பொதுச் செயலர் ராஜா , சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். மூர்த்தி கண்டன உரையாற்றினர். கோட்ட உதவித் தலைவர் பேபி ஷகீலா நிறைவு உரையாற்றினார்.
ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக மோசஸ் நன்றி கூறினார்.