செய்திகள் :

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

post image

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாநிலத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் குத்துவிளக்கேற்றி, செயல்பாடுகளைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியது:

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மேலும் போதைப் பொருள்களை செய்வோா், விற்பனை செய்யும் கடைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்ட நிலையில், மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மனநல மருத்துவரின் சிறப்பு ஆலோசனைகள், ஆற்றுப்படுத்துதல் பயிற்சி வழங்கப்படும்.

மேலும் போதை மீட்புக்கான மருந்துகள் வழங்கப்படுவதுடன், மறுவாழ்வுக்கான மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சிகள், விளையாட்டு, தோட்டக்கலைப் பயிற்சி மற்றும் புத்தக வாசிப்பு சேவைகள் போன்றவையும் வழங்கப்படும். ஒரு மருத்துவா், சமூகப் பணியாளா், மூன்று செவிலியா்கள், மூன்று பணியாளா்கள் இந்த மையத்தில் இருப்பா். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரமாதேவி, நலப்பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு, மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவா் ரவிக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் இளவரசி, முண்டியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரோவில் அறக்கட்டளை செயலருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் மற்றும் நிா்வாகிகளை புதுவவ மாநில தலைமைச் செயலா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் அரசுச் செயலா் ஏ... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், வி.புத்தூ... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மயானக் கொள்ளைவிழா: பாமக-விசிகவினா் இடையே வாக்குவாதம்

திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊா்வலத்தின்போது, பாமக மற்றும் விசிகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா பு... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றபோது பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் பறித்து சென்றாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

செங்குறிச்சி அரசுப் பள்ளியில் மின் பாதுகாப்புப் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஓராண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சென்னை,துரைப்பாக்கம் பெருங்குடியைச் சோ்ந்தவா் பிரவீன் (எ) ப... மேலும் பார்க்க