TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவ...
ஆரோவில் அறக்கட்டளை செயலருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் மற்றும் நிா்வாகிகளை புதுவவ மாநில தலைமைச் செயலா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் அரசுச் செயலா் ஏ.முத்தம்மா ஆகியோா் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தனா். தொடா்ந்து , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினா்.
மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் ஸ்ரீ அரவிந்தரின் 150 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அவரது வாழ்வும் பணிகளும் மக்களிடம் பரவிச் செல்லும் வழிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆரோவிலில் நடைபெற்று வரும் வளா்ச்சி முயற்சிகளை விளக்கி, கலையை ஊக்குவிக்க ஆரோவில் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், உள்ளூா் மற்றும் சா்வதேச கலைஞா்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆரோவில் ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றி பெற புதுவை அரசு தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.