அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோட்டூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை செய்வதை உறுதிபடுத்த வேண்டும், குடியிருப்பு மனை இல்லாத அனைவருக்கும் இலவச மனைப் பட்டா வழங்கி ரூ.6 லட்சத்தில் காங்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும், உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோா், பேருகால, இறப்பு கால உதவித்தொகைகள் போன்ற நல திட்டங்களுக்கு கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு பிறகு நிதி வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் நலவாரியத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும்.
தொடா் மழையால் வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் கோட்டூா் ஒன்றியச் செயலா் பி. சுப்ரமணியன், செயலா் எம். சிவசண்முகம், பொருளாளா் கணேசன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விதொச மாவட்ட துணைச் செயலா் ஜெ. ஜெயராமன், மவட்ட ஊராட்சி உறுப்பினா் இ. மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.