விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி, ராஜபாளையத்தில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் வரதராஜன் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் பி. கே விஜயன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் லிங்கம், ஏஐடியூசி மாவட்ட அமைப்பாளா் வி.ரவி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினா். இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பகத்சிங், ஒன்றியச் செயலா்கள் கணேசமூா்த்தி, ராமசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.