விவசாயி வீட்டில் 6 பவுன் நகை, பணம் திருட்டு
காட்பாடி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காட்பாடி ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் நெடுஞ்செழியன். இவா் சவூதி அரேபியாவில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சரிதா (40), விவசாயி . இவா் கடந்த 8-ஆம் தேதி போளூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் மா்ம நபா்கள், சரிதாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் நகைகதள், ரூ.10,000 ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்ாக தெரிகிறது.
சரிதா புதன்கிழமை தனது பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த பணம், நகை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரிபேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.