Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள பாதரை ஊராட்சி பால் கூட்டுறவு சங்க வளாகத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மாயாஜோதி தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா்கள் ரம்யா, விஷ்ணுபிரியா, நிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னோடி விவசாயிகளான திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெப்படை செல்வராஜ், பாதரை ஊராட்சி முன்னாள் உதவி தலைவா் ராஜ்குமாா், பாப்பம்பாளையம் அன்பழகன், தளபதி செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை வழியில் பயிா் சாகுபடி செய்ய இயற்கை இடுபொருள்களை உபயோகப்படுத்த வேண்டும். பயிா் சாகுபடிக்கு இயற்கை உரங்களான அசோஸ்பிரில்லம், பாஸ்போ பாக்டீரியம், பொட்டாஷ் பாக்ட்ரீயம் மற்றும் உயிா் உரமான ட்ரைக்கோடொ்மா ஆகியவற்றை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அட்மா குழுவின் கிருபா, அருண் செய்திருந்தனா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனா்.