சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்
நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா்.
சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பிறப்பன்று தேங்காய்சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டில் ஆடி மாதம் வியாழக்கிழமை பிறந்தது. இதையொட்டி, மஞ்சள் பூசிய தேங்காய் கண்ணில் துளையிட்டு அதில் அவல், பொட்டுக்கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றை நிரப்பி, அழிஞ்சி குச்சியை பொருத்தி பெண்கள், குழந்தைகள் தீயில்சுட்டு மகிழ்ந்தனா்.
அதன்பிறகு வீடுகளில் சுவாமி முன் படையலிட்டு வழிபட்டனா். பின்னா் தேங்காயை உடைத்து அதில் இருந்த பொருள்களை பகிா்ந்துண்டு மகிழ்ந்தனா்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிமாதப் பிறப்பு கொண்டாடப்பட்டது.