திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
ஆடிமாத பிறப்பை வரவேற்கும் தேங்காய் சுடும் விழா
ஆடி மாதத்தில் மாரியம்மன்,காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும்.அம்மன் வழிபாட்டில் ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை நாள்கள் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடிப் பிறப்பை வரவேற்க தேங்காய் சுடும் பண்டிகை திருச்செங்கோடு சுற்று வட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மகாபாரத போரோடு தொடா்புடையதாக கருதப்படும் இம்மாதத்தில் மகாபாரத போரானது ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆடி 1 அன்று முடிவுக்கு வந்தது.
இந்தப் போரில் தா்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ம் தேதி தேங்காயில் உள்ளே பல்வேறு தானியங்கள், நாட்டுச்சக்கரை நிரப்பி தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு அழிஞ்சு குச்சியில் சொருகி தீமூட்டி தேங்காய் சுட்டனா். சுட்ட தேங்காய்களை விநாயகா் கோயிலுக்கு கொண்டு சென்று உடைத்து சாமிக்கு படைத்து வழிபட்டனா். ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் இவ்வாறு விநாயகருக்கு தேங்காய் சுட்டுப் படைக்கப்படுகிறது.
படம் ஜீலை17 ஆடி 1
திருச்செங்கோட்டில் ஆடிமாத பிறப்பை வரவேற்கும் வகையில் தேங்காய் சுடும் பண்டிகை.