செய்திகள் :

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

post image

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 22,473 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 235.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 222.99-க்கும், சராசரியாக ரூ. 228.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 222.69-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 146.19-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 190.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்து 844-க்கு கொப்பரை ஏலம் போனது.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க

ஆடிமாத பிறப்பை வரவேற்கும் தேங்காய் சுடும் விழா

ஆடி மாதத்தில் மாரியம்மன்,காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும்.அம்மன் வழிபாட்டில் ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை நாள்கள் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடிப் ... மேலும் பார்க்க