செய்திகள் :

விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகர் விஷ்ணு விஷால் தான் 150 நாள்களாக நடித்துவந்த ’இரண்டு உலகம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

தற்போது, 3-ஆவதாக இந்தக் கூட்டணி ‘இரண்டு உலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தை சதய்ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது விஷ்ணு விஷாலின் 21ஆவது படமாக உருவாகிவருகிறது.

கடைசிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ராட்சசன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், 150 நாள்களாக நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும், அதில் ராம்குமார் இந்த முறையும் புதியதாக தனித்துவமாக ஆர்வத்தை தூண்டும்படி படத்தை சமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது கூட்டணியில் உர... மேலும் பார்க்க

3,000 காட்சிகள் குறைப்பு: படுதோல்வியை நோக்கி கமலின் தக் லைஃப் திரைப்படம்!

கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் வசூல் 6-ஆவது நாளில் மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்... மேலும் பார்க்க

ரிவால்வர் ரீட்டா ரிலீஸ் தேதி!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் ... மேலும் பார்க்க

பல்கலை. பாடத்தில் வேடனின் பாடல் இணைப்பு!

கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எத... மேலும் பார்க்க

1930 - 2026: அனைத்து உலகக் கோப்பையிலும் தகுதிபெற்ற ஒரே அணியாக பிரேசில் சாதனை!

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி அனைத்து உலகக் கோப்பையிலும் தகுதிபெற்ற ஒரே அணியாக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பராகுவேயுடன் மோதிய பிரேசில் அணி 1-0 என வென்ற... மேலும் பார்க்க