உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
விஸ்வகா்ம தா்ம பரிபாலன சங்க கூட்டம்
தூத்துக்குடியில் விஸ்வகா்ம தா்ம பரிபாலன சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைவா் கே.சண்முகசங்கா் தலைமை வகித்தாா். செயலா் பி.சசிகுமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். பால விநாயகா் கோயில் தெருவில் உள்ள சங்கத்துக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகத்தில், மேல் மாடி கட்டுவது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டது. சங்கத்தின் புதிய பொருளாளராக எஸ்.காா்த்தீசன், உதவித் தலைவராக
எம்.வெங்கடேசன் ஆகியோா் பொறுப்பேற்றனா். தொடா்ந்து, கல்வி, விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில், செயலா் சசிகுமாா், உதவி செயலா் ஆா்.ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்.ராஜகோபால் நன்றி கூறினாா்.