விஸ்வநாத சுவாமி கோயில் குடமுழுக்கு
விஸ்வநாத சுவாமி கோயில் குடமுழுக்கு நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
கும்பாபிஷேக தினமான நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. கிரகசுத்தி, பிம்மசுத்தி, கோ பூஜை, லட்சுமி பூஜையுடன் மகா பூர்ணா குதி செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மேளம் தாளம் முழங்கிட புனித நீர் அடங்கிய யாக குணங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சிவன், அம்பாள் மற்றும் லட்சுமி நாராயண சுவாமி கோபுரங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!
இதில் இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முரளிதரன், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக பெருந்தோட்டம் முஸ்லிம் ஜமாத்தார்கள் பூஜை பொருள்களை வழங்கி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.