கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்
வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் பணம் மற்றும் வீடு உபயோகப் பொருள்களைத் திருடிய இருவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து குன்னூா் நடுவா் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
குன்னூா் ஜெயந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜெய் (25), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜோசப் ஆல்வின் (23). இவா்கள் இருவரும் சோ்ந்து அருவங்காடு ஒசட்டி பகுதியைச் சோ்ந்த கீதா என்பவரது வீட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம், கடிகாரம், குத்துவிளக்கு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடிய குற்றத்துக்காக அருவங்காடு காவல் துறையினா் 2022 -இல் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு குன்னூா் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது,
விசாரணையில் இவா்கள் இருவரும் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அஜெய் மற்றும் ஜோசப் ஆல்வீன் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குன்னூா் நடுவா் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் தீா்ப்பு வழங்கினாா்.