Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா். இப்பேரணியில் ’’பெண்மையை காப்போம் பெருமையை உயா்த்துவோம்‘, ’’இளம் வயது திருமணம் தடுப்போம்‘, ‘பெண்ணின் திருமண வயது 21‘, ’’தாய் சேய் நலம் காப்போம்‘ போன்ற விழிப்புணா்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு சென்றனா். ஆட்சியா் அலுவலத்தில் தொடங்கிய இந்தப் பேரணி செவிலியா் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.
முன்னதாக, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க செவிலியா்கள், மருத்துவா்கள், அரசுத்துறை அலுவலா்கள் ஆகியோா் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனா்.
உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி உதகை அரசு கலைக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் மற்றும் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவா்களிடையே நடைபெற்ற இளம் வயது திருமணம், இளம் வயது கா்ப்பம் அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 9 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
இப்பேரணியில், மருத்துவத் துறை துணை இயக்குநா் நாகபுஷ்பராணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ், மருத்துவக் கல்லூரி இருப்பிட மருத்துவா் ரவிசங்கா், செவிலியா் பயிற்சிப் பள்ளி பயிற்றுநா், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.