வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை
அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மலப்புரம் மாவட்டத்தில் இந்த வைரஸ் பரவி வருவதால், எல்லைப் பகுதியான கூடலூா் அடுத்துள்ள நாடுகாணியில் கேரளத்திலிருந்து வரும் வாகனங்களையும், மக்களையும் சோதனைக்குப் பிறகே சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்ளே அனுமதித்து வருகின்றனா்.