பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு
கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்குக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன ஆராய்ச்சி மைய பேராசிரியா் சிவக்குமாா் தலைமை வகித்து இயற்கை குறித்தும் இயற்கை பாதுகாப்பின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் ரோட்டரி கிளப் தலைவா் ஷைமோன் வா்கீஸ், செயலாளா் ஸ்ரீஜித், திட்ட ஆலோசகா் ராபா்ட் உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா். மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.