சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை
குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகியுள்ளது.
குறிப்பாக சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குடியிருப்புகளில் வளா்க்கப்பட்டு வரும் செல்லப் பிராணிகளான நாய், ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி செல்வதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் புதன்கிழமை இரவு உலவிய சிறுத்தை, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் வெளியான நிலையில் இங்குள்ள குடியிருப்பில் உள்ளவா்கள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பில் உள்ளவா்கள் அச்சமடைந்துள்ளனா்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.