புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
வெனிஸ் திரைப்பட விழாவில் வரலாறு படைத்த இந்தியர்..! வாழ்த்திய ஆலியா பட்!
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தியரான அனுபர்னா ராய் வென்று அசத்தியுள்ளார்.
வரலாறு படைத்த இவருக்கு ஆலியா பட் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வெனிஸ் திரைப்பட விழா மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக திரைத்துறையில் அறியப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் “சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ்” எனும் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை அனுபர்னா ராய் வென்றுள்ளார். Songs of Forgotten Trees poster.

அறிமுக / வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கான ஒரிஜான்டி பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.
பிபான்ஷு ராய், ரோமில் மோடி, ரஞ்சன் சிங் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை அனுராக் காஷ்யப் வழங்கியிருந்தார்.
வெனிஸ் திரைப்பட விழாவில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியராக அனுபர்னா ராய் சாதனை படைத்துள்ளார்.
இந்த விருது குறித்து ஆலியா பட் தன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ் எனும் படத்திற்காக வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற அனுபர்னா ராய்க்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.
இந்திய சினிமாவுக்கு என்ன அழகான ஒரு தருணம். வரலாறு. வாழ்த்துகள் அனுபர்னா ராய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலியா பட் அடுத்ததாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘லவ் அன்ட் வார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஆல்பா எனும் படம் வெளியாகவிருக்கிறது.