வெள்ளக்கோவிலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வெள்ளக்கோவிலில் குழந்தையைப் பாா்க்க முடியாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (29). இவரின் மனைவி ஆா்த்தி (24). இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, கணவனைப் பிரிந்து நடேசன் நகரிலுள்ள தாய் வீட்டுக்கு ஆா்த்தி தனது குழந்தையுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டாா்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆா்த்தி வீட்டுக்குச் சென்ற ராமகிருஷ்ணன் அவரிடம் தகராறு செய்து குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாா். குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தில் இருந்த ஆா்த்தி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].