Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் வருவாய் கிராமம் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் விவசாயி சதாசிவம் (45). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா் வெள்ளிக்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்த காயங்களுடன் 5 ஆடுகள் இறந்துகிடந்தன. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக தெருநாய்கள் கடித்ததில் ஆடுகளை இழந்த பல விவசாயிகளுக்கு அறிவித்தபடி அரசு இழப்பீடு வழங்கவில்லை. முழுமையாக இழப்பீடு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.