U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்
அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஜிஎஸ்டி விதிப்பு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொது மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு விவசாயப் பொருள்களுக்கும், மருந்துகளுக்கும், பால் பொருள்களுக்கும், அத்தியாவசியப் பொருள்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருள்களுக்கும், கட்டுமானப் பொருள்களுக்கும் மற்றும் உணவுப் பொருள்கள் அனைத்துக்கும் தற்போது 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வரி குறைப்பு பயன் பொது மக்களுக்கு சென்று அடையும் எனத் தெரிவித்துள்ளாா்.