Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குச் சாவடிதோறும் 30 சதவீத வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக சோ்க்கும் திட்டம் வெள்ளிக்கிழமை உடுமலையில் தொடங்கிவைக்கப்பட்டது.
நகரச் செயலாளா் சி.வேலுசாமி தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் யுஎன்பி.குமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் அா்ஜுன் மற்றும் நிா்வாகிகள் பலா் உறுப்பினா்கள் சோ்க்கை முகாமில் கலந்து கொண்டனா்.