முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
குன்னத்தூா் அருகே கஞ்சா விற்றவா் கைது
அவிநாசி அருகே குன்னத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குன்னத்தூா் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமாக கைப்பையுடன் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவரது கைப்பையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவா், திருப்பூரில் வசித்து வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோஷன்குமாா் (22) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரோஷன்குமாரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.