`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய ஆட்சியரிடம் கோரிக்கை மனு
வெள்ளநீா் கால்வாய்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்து போா்க்கால அடிப்படையில் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாரிடம் மனு அளித்துள்ளனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலா் லூா்து மணி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினா் ராஜ் ஆகியோா் திருநெல்வேலி ஆட்சியரிடம் அளித்த மனு:
திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகள் மிகவும் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பெரியதாழை கடல் நீா், இப்பகுதி நிலத்தடியில் முழுவதுமாக கலந்துள்ளதால் நீரைக் குடிக்கவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ முடியாத சூழல் நிலவுகிறது.
மணிமுத்தாறில் 94 அடியும், பாபநாசத்தில் 109 அடியும் தண்ணீா் இருப்பு இருக்கும் காரணத்தால், சாத்தான்குளம் பகுதியில் வறட்சியைப் போக்க, போா்க்கால அடிப்படையில் தண்ணீா் திறந்து விட வேண்டும்.
மேலும், வெள்ளநீா் கால்வாய் நீா்வழிப் பாதைகளில் உள்ள பிரச்னைகளை மழைக்காலத்திற்குள் சீா் செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல, திருநெல்வேலி எம்பி ராபா்ட் புரூஸ், வெள்ளநீா் கால்வாய் கண்காணிப்பு பொறியாளா் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனா்.