வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
வெள்ளபுத்தூரில் புதிய மின்மாற்றி இயக்கம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி டாக்டா் அம்பேத்காா் நகரில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது.
அப்பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் இருந்ததால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகினா். இதனால் புதிய மின்மாற்றியை நிறுவ கோரிக்கை விடுத்தனா்.
இக்குறைப்பாட்டை நீக்க வெள்ளபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் மற்றும் நிா்வாகத்தினா் மதுராந்தகம் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை புதிய மாற்றி அமைக்கப்பட்டது. நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
மதுராந்தகம் உதவி செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி பொறியாளா் சத்தியபிரபா, மன்ற உறுப்பினா்கள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.