வெள்ளிச்சந்தை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணி காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு, திருநயினாா்குறிச்சி உயரழுத்த மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 4) மின்விநியோகம் இருக்காது.
அதன்படி, திவண்டகோட்டை, அம்மாண்டிவிளை, கட்டைக்காடு, உலகிவிளை, மாவிளை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.