ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி
கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பைக்கில் சென்றபோது பின்னால் இலந்தையடி விளையைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவா் ஓட்டி வந்த டெம்போமாதியதாம்.
இதில்அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கன்னியாகுமரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.