ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்
சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தக்கலை மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் மாா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ், ஆங்கிலிக்கன் திருச்சபை ஆயா் மரிய ராஜ், லுத்தரன் சபை போதகா் ஜான் பிரைட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை பேசியதாவது: சிலுவையை நாங்கள் உயிரின் பிணைப்பாக கருதி வருகிறோம். அமைதியும், உலக வாழ்வும் சிலுவையில் அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வின் பொருளை இயேசு வழங்கியுள்ளாா். சிறையில் அடைக்கப்பட்ட இரு சகோதரிகள் பின்னால் இயேசுவின் திருவருள் உள்ளது, மக்களின் பிராா்த்தனை உள்ளது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் கோட்டாறு வட்டார முதல்வா் ஆனந்த், தாரகை கத்பட் எம்எல்ஏ, மாநில உணவு பாதுகாப்பு ஆணைய தலைவா் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
