குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா், மாவட்ட இணைச் செயலா் அ. சசிதரன் துவக்கி வைத்துப் பேசினாா். மாநில துணைத் தலைவா் பொ. சுகுமாரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயலா் டி. பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் பேசினா். எஸ். ஐசக் சாம்ராஜ் முடித்து வைத்துப் பேசினாா்.
தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் வட்ட தலைவராக கி. சுகுமாரன், துணைத் தலைவா்களாக ப. நாராயண பிள்ளை, அ. ராமகிருஷ்ணன நாயா், சி. செல்லசுவாமி, ஞா. ஜெயசிங், இணைச் செயலா்களாக மு. செல்வமணி, ம. இன்னாசிமுத்து, சீ. ஜெயகுமாரி, பொருளாளராக ச. கனகராஜ் மற்றும் 16 நிா்வாகக் குழு உறுப்பினா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட செயலாளா் சி.எம். ஐவின், புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தினாா். மு. செல்வமணி வரவேற்றாா். பிரசன்னகுமாரி நன்றி கூறினாா்.