குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது.
விழாவுக்கு, வரவேற்புக் குழு தலைவா் லேகா தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி அலுவலகத்தைத் திறந்துவைத்தாா்.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ராதிகா, மாவட்டத் தலைவா் மேரி ஸ்டெல்லாபாய், செயலா் ரகுபதி, பொருளாளா் சாரதாபாய், மாநிலக் குழு உறுப்பினா் ஆா். லீமாரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் கே. கனகராஜ், மாவட்டச் செயலா் செல்லசுவாமி, நிா்வாகிகள் பங்கேற்றனா்.