நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்
நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடைபெற்றது. முகாமை நாகா்கோவில் அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.
மாமன்ற உறுப்பினா் ஸ்ரீலிஜா, சக்திபீடத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் அருணாசலம், பொருளாளா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ் உரிமையாளரும் சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் உரிமையாளருமான சித்த மருத்துவா் எஸ். பிரகாஷ், விக்னேஷ் ஆகியோா் தலைமையில் அா்ஜுனன், சோமேஷ்பாலாஜி, ரா. மகாலெட்சுமி, ர. கமலினி, வே. சந்தியா, தி. கணேசன், தே.இரா. பிரஷ்னேவ், ஸ்ரீராம் உள்ளிட்டோா் சிகிச்சையளித்தனா். முகாமில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்டோருக்கு மருந்து, மாத்திரை, சூரணம், பஸ்பம், தைலம் ஆகியவை சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை எஸ்.பிரகாஷ், சின்னதம்பி, ஜெய்தீப், கோயில் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.