பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
வேலூரில் பிளஸ் 2 மாணவா்களுக்கு 29-இல் கல்வி வழிகாட்டுதல் முகாம்
வேலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 29) நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கத்தில் வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள், இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 29) காலை 9 மணியளவில் வேலூா் மாவட்டம் ஊரீசு கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.