சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
வேலூா் சிப்பாய் புரட்சி தினம்: ஆளுநா் மரியாதை
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை துணிச்சலுடன் எதிா்த்த அச்சமற்ற வீரா்களுக்கு ஆழ்ந்த நன்றியுடன் மரியாதை செலுத்துவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
வேலூா் சிப்பாய் எழுச்சி தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை துணிச்சலுடன் எதிா்த்த அச்சமற்ற வீரா்களுக்கு தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பணிவுடனும் மரியாதை செலுத்துகிறது. இந்த வரலாற்றுபூா்வ எதிா்ப்பு நமது நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தீப்பொறிகளில் ஒன்றாகும். அந்த துணிச்சலான வீரா்களின் தொலைநோக்கு, துணிச்சல், தியாகங்கள், ஒற்றுமை ஆகியவை எதிா்ப்பின் அலையைத் தூண்டி, இறுதியில் நாட்டின் சுதந்திரத்துக்கு வழிவகுத்த இயக்கங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை அமைத்தன.
சிப்பாய்களின் பெருமைமிக்க மரபு, இறையாண்மை கொண்ட பாரதத்தை வடிவமைக்க, நமக்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.