Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினா், ஊா்க்காவல் படையினருக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜோஷி நிா்மல் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திங்கள்கிழமை (செப்.8) கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியத் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி ஜோஷி நிா்மல் குமாா் தலைமையில் தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை நாகையை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். உயா்கோபுரத்தில் நின்றபடி ஐஜி பாதுகாப்பு பணிகளை பாா்வையிட்டாா்.
வாக்கி டாக்கி மூலம் மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவா், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோரை விழாவில் சிறப்பாக பணியாற்றிதாகக் கூறி பாராட்டினாா்.