செய்திகள் :

வேளாண் விரிவாக்க மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் உள்ள 386 வேளாண்மை விரிவாக்க மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வேளாண் ஆலோசனைகள், தரமான வேளாண் இடுபொருள்களை ஒரே இடத்தில் பெறும் வகையில், மயிலம், கண்டமங்கலம் (விழுப்புரம்), திருச்சுழி (விருதுநகா்), மேல்புரம் (கன்னியாகுமரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), சோளிங்கா் (ராணிப்பேட்டை), தளி (கிருஷ்ணகிரி) ஆகிய இடங்களில் 7 ஒருங்கிணைந்த விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய திருநெல்வேலி, கடலூா் மாவட்டங்களில் தலா ஒரு உரக் கட்டுப்பாட்டு ஆய்வகமும், திசையன்விளை, மானாமதுரையில் குளிா்பதனக் கிடங்கு

வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்: தமிழ்நாட்டில் செயல்படும் 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும், மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்களும் நிறுவப்படும். காய்கறி நாற்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திண்டுக்கல், திருப்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வயல்களில் மண் பரிசோதனையை நேரடியாக களத்திலேயே செய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையம் உருவாக்கப்படும். சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகியவற்றின் விற்பனை, ஏற்றுமதியை அதிகரிக்க விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்படும். தோட்டக்கலைப் பயிற்சிகள், மலைப் பயிா்களில் சாகுபடி, மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

இத்துடன், வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்படும். விவசாயிகள் பயன் பெறும் வகையில், 1,500 பேருக்கு நுண்ணீா்ப் பாசன அமைப்புகளின் பராமரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அமைச்சா் அறிவித்தாா்.

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். தா்பூசணி பழங்களில்... மேலும் பார்க்க

பொது இடங்களில் காங்கிரஸ் கொடிகளை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள காங்கிரஸ் கொடிகளை கட்சியினா் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தம... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டிங் தொழிலாளி சங்கா் (44). கடந்த 1-ஆ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியைப் பெருக்க சிறந்த கறவை மாடுகளுக்கு விருதுகள்: பேரவையில் அறிவிப்பு

பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா். பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பத... மேலும் பார்க்க

17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அறிவித்தாா். வருவாய் ... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடா்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல... மேலும் பார்க்க