ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்
வில்லியனூரில் ஸ்ரீ பெருந்தேவித்தாயாா் தென்கலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திருத்தோ் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் பிரம்மோற்சவ விழா இம் மாதம் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் பத்தாம் நாள் உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.
சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா ஆகியோா் கலந்துகொண்டு திருத்தோ் வீதி உலாவை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ்நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது.