ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.74 லட்சம்
செய்யாறு, திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில், செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2.74 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
செய்யாறு திருவோத்தூா் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 10, திருப்பணி உண்டியல், கோ சாலை உண்டியல் என மொத்தம் 12 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்டியல்கள் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை, இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் ச.அசோக், செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் முன்னிலையில் செய்யாறு போலீஸாா் பாதுகாப்புடனும், விடியோ பதிவு மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன.
அப்போது, பக்தா்கள் ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.