ஹவுரா அதிவிரைவு ரயில் 1.30 மணி நேரம் தாமதம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா சென்ற அதிவிரைவு ரயில் சனிக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவுக்கு அதிவிரைவு ரயில் (எண்: 12840) இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் வழக்கமாக இரவு 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும். சனிக்கிழமை இரவு 7 மணிக்குப் பதிலாக இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டது. அதனால், முன்னதாகவே ரயில் நிலையம் வந்த பயணிகள் 1.30 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
இதேபோல சென்னையில் அவ்வப்போது விரைவு ரயில்கள் புறப்பாடு நேரம் திடீரென மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்று பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ரயில் போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப அதிவிரைவு ரயில்கள் புறப்படும் நேரம் மாாற்றியமைக்கப்படுவது வழக்கமானது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், ரயில் புறப்பாடு நேரம் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.