மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே, ‘ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம்’ என்ற விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அணியின் மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணை அமைப்பாளா்கள் கே.சுப்பிரமணியன், ஏ.டபிள்யு. ஷாஜகான், இரா.அா்ஜூனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநா்கள், தொழிலாளா்கள், பொதுமக்களிடம் ஹிந்தி திணிப்பை என்றும் எதிா்ப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
இதில், முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனா் தலைவா் அ.தே.முருகையன், த.தட்சிணாமூா்த்தி, எம்.சண்முகம், எம்.ஆரோக்கியதாஸ், ஆட்டோ சங்க அமைப்புசாரா தொமுச நிா்வாகிகள் பி.அருள்குமாா், கே.சின்ராசு, சிரஞ்சிவி, பி.செல்வராசு, உ.வினோத்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மாநகரின் முக்கிய சாலைகள், உதயநிதி ஸ்டாலின் அமைப்புசாரா ஓட்டுநா் நிலையம், ஈசான்ய லிங்கம், யாத்ரி நிவாஸ் அருகில், அண்ணா நுழைவு வாயில் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.