``ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்..'' - கர்நாடக அரசு எச்சரிக்க காரணம் என்ன?
ஹோட்டலில் தயாரிக்கப்படும் இட்லி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கர்நாடகா அரசு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலானோர் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவாக இட்லி உள்ளது. சாலையோர கடைகளில், உணவகங்களில் இட்லியை பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு தயாரிப்பதாக கூறப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து அதன் மாதிரியே சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் முதற்கட்ட ஆய்வின் முடிவில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவகங்களில் இட்லியை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் பெரும்பாலான இட்லி கடைகளில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இட்லியை சூடுபடுத்தும்போது பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து 'carcinogenic' என்ற ரசாயனம் வெளியேறி புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், "உணவங்கள் மற்றும் ஹோட்டல்களில் இட்லி சமைக்க பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதை தடைசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்படும். முன்பு, இட்லி தயாரிக்க பருத்தி துணி பயன்படுத்தப்பட்டது. இப்போது பெரும்பாலான ஹோட்டல்கள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, பொதுமக்கள் உட்கொள்ளும் இட்லிகளில் புற்றுநோய் உண்டாக்கும் மூலப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று தெரிவித்தார்.
ಉಪಹಾರ ಕೇಂದ್ರಗಳು ಮತ್ತು ಹೋಟೆಲ್ಗಳಲ್ಲಿ ಇಡ್ಲಿ ಬೇಯಿಸಲು ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಬಳಕೆ ಮಾಡಲಾಗುತ್ತಿದ್ದು, ಇದನ್ನು ನಿಷೇಧಿಸಲಾಗಿದೆ. ಇನ್ನೇರಡು ದಿನಗಳಲ್ಲಿ ಅಧಿಕೃತ ಸುತ್ತೊಲೆ ನೀಡಲಾಗುವುದು. ಈ ಮೊದಲು ಇಡ್ಲಿ ತಯಾರಿಕೆಗೆ ಹತ್ತಿ ಬಟ್ಟೆ ಬಳಕೆ ಮಾಡಲಾಗುತ್ತಿತ್ತು. ಆದರೆ, ಇತ್ತೀಚೆಗೆ ಹೆಚ್ಚಿನ ಹೋಟೆಲ್ಗಳಲ್ಲಿ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಬಳಸುತ್ತಿದ್ದಾರೆ.… pic.twitter.com/LFGfVmRavU
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) February 27, 2025